--- --:--:-- --

ராதிகா என் அம்மா கிடையாது.. அப்பாவோட இரண்டாவது மனைவி..அதிரடியாக கூறிய நடிகை வரலக்ஷ்மி ..!

5

ரலட்சுமி சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ராதிகா குறித்து தெரிவித்துள்ள கருத்து பாரபரப்பை கிளப்பியுள்ளது. தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வரலட்சுமி. தமிழில் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் வரலட்சுமி தற்போது அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மகள். இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ரேயனுக்கு சோஷியல் மீடியாவில் குடும்பம் பற்றி வரும் மோசமான கமெண்ட்ஸ் பற்றி கேட்கப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த வரலட்சுமி, ரேயன் மிகவும் ஸ்டிராங்கான பொண்ணு. இது போன்ற கமெண்ட்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

 

சிலர் என்னிடம் நீங்க ஏன் ராதிகாவை ஆன்டி என்று கூப்பிடுகிறீர்கள். அம்மா என்று கூப்பிட வேண்டியது தானே என்று கேட்பார்கள். நான் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் ஒன்றும் எனக்கு அம்மா கிடையாது எனக் கூறியுள்ளார்.

Right Menu Icon