--- --:--:-- --

பப்ஜி விளையாடிய இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர்..!

5

திருப்பூரில் இரவு நேரத்தில் தூங்க விடாமல் நண்பர்களுடன் விளையாடி இடையூறு செய்து வந்த இளைஞரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

 

முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கருகில் துவைக்கும் கல்லில் அமர்ந்து நேற்று முன்தினம் சத்தம்போட்டு பப்ஜி விளையாடியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் ராமசாமி என்ற முதியவர் சத்தம் போடுவதால் துவங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கார்த்திக்கிடம் கூறியிருக்கிறார்.

 

அப்பொழுது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார்.

 

Right Menu Icon