குளிர்பானம் காலாவதியானதாக கூறி பணம் வாங்கிய அதிகாரி..!
திருவெண்ணைநல்லூர் அருகே பெட்டிக்கடையில் சுகாதார ஆய்வாளர்கள் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 27ஆம் தேதியன்று ஏமப்பூர் கிராமத்தில் அருளரசன் என்பவரது பெட்டி கடையில் குளிர்பானம் காலாவதியாகிவிட்டதாகவும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறி அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்து அந்த கடையில் இருந்து பணம் பெற்று செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





