--- --:--:-- --

பொது இடத்தில் அசிங்கப்படுத்திய 4 பேர்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

6

தேனி மாவட்டம் போடி அருகே ஊர் பஞ்சாயத்து விதைக்கப்பட்ட தண்டனைத் தொகையை உரிய நேரத்தில் தராத நபரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சங்கராபுரத்தில் செல்லதுரை என்பவர் முத்துப்பாண்டி என்பவரை தள்ளிவிட்டதாகவும் அதில் காயமடைந்த முத்துப்பாண்டிக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தருமாறு ஊர் பஞ்சாயத்தில் செல்ல துறைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிகிறது.

 

முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்திய செல்லதுரை உரிய நேரத்தில் எஞ்சிய தொகையை தராததால் முத்துப்பாண்டி அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் குறித்து அவதூறாக பேசியதால் செல்லதுரை தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

 

Right Menu Icon