--- --:--:-- --

விஷச் சாராயம்  குடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு..!

10

குஜராத்தில் விஷச் சாராயம்  குடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் குடகு மாவட்டத்தில் சாராயம் வாங்கிக் குடித்தவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

 

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. விஷ சாராயம் குடித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சாராயம் குடித்ததாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Right Menu Icon