பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!
வேதாரண்யத்தில் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குருகுலம் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர்.
இதில் விடுதி மாணவிகள் 140 பேர் இன்று காலை சிற்றுண்டி உண்ட போது 60 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் சாப்பிட்ட கோதுமை மாவில் பல்லி கிடந்ததாக மாணவிகள் கூறியதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை நாகை மாவட்ட எஸ்பி ஜானகி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




