பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற தாய்..!
புதுச்சேரியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு மாத குழந்தையை பெற்ற தாயே உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த கடற்கரை சுடுகாட்டில் கால் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் குழந்தை மணலில் புதைந்ததை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர்.
இதனிடையே புது குப்பம் குலத்திற்கு அருகே வசிக்கும் குமரேசன் – சங்கீதா தம்பதியினர் தனது குழந்தையை காணவில்லை என தேடி வந்த நிலையில் மணலில் இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என கூறி கதறி அழுதுள்ளார்.
குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு வயது குமரேசன் மற்றொரு மனைவியான சங்கீதாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் சங்கீதாவுக்கு 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதனிடைய விசாரணை நடத்திய பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் இவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனமுடைந்த சங்கீதா குடிபோதையில் கணவர் தூங்கிய பிறகு குழந்தையை உயிருடன் புதைத்ததாகவும் மேலோட்டமாக புதைத்ததால் நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.





