ஏடிஎம்மில் எடுத்த பணம்.. வீட்டிற்கு சென்றால் மாயம்..!
திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் வங்கியில் இருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். அப்பொழுது திருநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜூஸ் குடிக்க சென்றார்.
பின்னர் வீடு திரும்பும் போது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பணத்தை எடுத்து திருடி சென்றது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





