குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரண்..!
திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
விசாரணையில் தகராறு காரணமாக குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும் சுரேஷின் உடலை அப்புறப்படுத்த முடியாததால் சரண் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அழுகிய நிலையில் அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





