--- --:--:-- --

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் சிறுவன் பலி..!

9

ள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

நான்கு வயது சிறுவன் கிணற்றில் தந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது விடியற்காலை 4 மணி அளவில் கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

 

வலி தாங்க முடியாமல் கிஷோர் கதறிய நிலையில் பெற்றோர் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon