சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதா..!
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவையின் முதல் நாளில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
முதல்நாளில் பழனிசாமி தரப்பில் யாரும் பங்கேற்காத நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நடந்த கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத் தொடரில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று தாக்கல் ஆகிறது.






