--- --:--:-- --

திடீரென உடைந்து விழுந்த இயந்திரம்.. அரிசி குவியலில் சிக்கி இருவர் பலி..!

9

சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை அருகே தனியார் அரிசி ஆலையில் இயந்திரகொம்பு உடைந்து விழுந்ததில் அரிசி குவியலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

சாக்கோட்டையில் இருந்து மழை கோட்டை செல்லும் சாலையில் தனியார் அரசு ஆலையில் அரிசி பேக்கிங் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீர் என்று இயந்திரத்தின் மேல் கொம்பு உடைந்து அரிசி மளமளவென சரிந்தது.

 

அதில் பீகாரை சேர்ந்த குந்தன் குமார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவுடன் உடலை கைப்பற்றிய போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon