--- --:--:-- --

பனியின் தாக்கம் படிப்படியாக குறையும்..!

3

மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலகியதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், பனியின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் வியாழன் வரை வறண்ட வானிலை நிலவும் எனவும், வரும் 23 முதல் 25ஆம் தேதி வரை ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

.

நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon