instagramல் ரீல்ஸ் வெளியிட்ட மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்..!
எந்த நேரமும் instagramல் ரீல்ஸ் வெளியிட்ட மனைவியை பலமுறை கணவர் கண்டித்தும் திருந்தாதால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்.
திருப்பூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள காவிரி சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். சித்ரா டிக்டாக்கில் அதிக வீடியோ வெளியிட்ட பிரபலமானவர்.
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். தினமும் விதவிதமான வீடியோக்களை அவர் வெளியிட்டு வருவதால் ஏராளமான ஃபாலோயிர்கள் கிடைத்துள்ளனர். சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கும் சென்று இருக்கிறார் சித்ரா.
இதையெல்லாம் கணவர் அமிர்தலிங்கம் கண்டித்த நிலையில் மகளின் திருமணத்திற்காக திருப்பூருக்கு வந்திருக்கிறார் சித்ரா. அப்பொழுது மீண்டும் சென்னை செல்ல கணவர் எதிர்ப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த அமிர்தலிங்கம் துப்பட்டாவை எடுத்து மனைவி சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். சித்ராவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அமிர்தலிங்கத்தை கைது செய்தனர்.





