ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்.. மறுபிறவி எடுத்த சிறுமி..!
தெலுங்கானாவை சேர்ந்த சிறுமிக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆந்திராவில் இருந்து இதயம் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரராவ் என்பவர் மூளை சாவடைந்தார்.
அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்தனர். இதனிடையே தெலுங்கானா மாநிலம் வனஸ்பதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி இதய நோய் காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பத்மாவதி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
அந்த சிறுமிக்கு இதயத்தை பொருத்துவதற்காக ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு இதயம் எடுத்துவரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து விமான மூலம் ரேணிகுண்டா கொண்டு செல்லப்பட்ட இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மருத்துவர்கள் சிறுமிக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.





