தலைக்கு மேல் 9 கோடி.. தலை சுற்ற வைத்த பெண்..!
தலைமுடி ஓட்டில் வைத்து போதை பொருளை கடத்த முயன்ற உகாண்டா நாட்டு பெண்ணை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உகாண்டாவை சேர்ந்த பெண்மணி ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்பொழுது ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை அந்த பெண் தலைமுடி ஓட்டில் மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளாடைகளிலும் அந்த பெண் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வர அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.





