பட்டியலின மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவிகளை நேற்று பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை தலைமை ஆசிரியர் இளமதி, ஈஸ்வரி கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு அறிவியல் ஆசிரியர் உடந்தையாக இருப்பதாக மாணவிகள் பேசும் வீடியோ வெளியாக இருந்தது. இது குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கும் வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தாராபுரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





