மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு.. சிக்கன் கிரில் மாஸ்டர் அடித்து கொலை..!
தஞ்சையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அசைவ உணவகம் முன்பு சிக்கன் மாஸ்டரை அடித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணம் செல்போன் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரகாஷ் என்பவர் கிரில் மாஸ்டரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என மனைவி புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் பிரகாஷின் சடலம் 19ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
அந்த பகுதி சிசிடிவியை ஆய்வு செய்ததில் ஆட்டோ ஓட்டுனரான தமிழ் நீதி மற்றும் பிரகாஷை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும் அவரது நண்பர் பிரவீன் பைக்கில் பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை பிடித்த விசாரித்த பொழுது கொலையில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து இருவரையும் கைது செய்தனர்.





