கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்ற மகளிர் குழுவினர்..!
இன்னும் கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்று நாகையில் மகளிர் குழுவினர் அலப்பறை செய்தனர். கட்சி தொடங்குவது குறித்தும் அரசியலுக்கு வருவது குறித்தும் உரிய நேரத்தில் அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் மூலம் சமூக வலைதளங்கள் மூலம் அரசியலுக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று நாகையை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் சிலர் வீடு வீடாக சென்று வீதியில் செல்வோரை மடக்கியும் ரஜினிக்கு வாக்களிக்குமாறும் கேட்டனர்.
கஜா புயலால் பாதித்த ஏழைகளுக்கு உதவி கரம் நீட்டிய தலைவா வா! தமிழக மக்களையும் தமிழகத்தையும் காத்திட தலைமை ஏற்க வா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.






