அரசின் தேடுதல் குழுவிற்கு ஆளுநர் எதிர்ப்பு..!
கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை வளர்ச்சி மாநிலமாக திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது. இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலை இல்லை. நாம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். தோழமை கட்சிகள் இன்னும் வேகமாக பரப்புரையை தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து த.வெ.க தலைவர் விஜய், இதுவரை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தாத நிலையில், சமீபத்தில் அவர் என்.டி.டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். இதனிடையே அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அருண்ராஜ், செய்தியாளர்களை சந்திக்கும்போது விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேட்டனர்.
அதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி. முதல்வர், எப்போது உண்மையான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறாரோ அதற்கு அடுத்த நாள் விஜய் சந்திப்பார் என்று கூறியுள்ளார். ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள மல்லை சத்யா, அடுத்து நடக்கும் பொதுக்குழுவில் தேர்தல் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்.
ம.தி.மு.க. தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது இதுவரை உறுதியான ஒன்று. ஆனால் இனிமேல் இருப்பார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழும். 2001-ம் ஆண்டு 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த அடுத்த நாள் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார்கள். ம.தி.மு.க.வின் கடந்த கால வரலாறு அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என் கூறியுள்ளார்.






