--- --:--:-- --

ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிக்கிறது விசிக..!

1

குடியரசு தினமான நாளை ஆளுநர் மாளிகை நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார். அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் தேநீர் விருந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

 

அதை வேளையில் அந்த விருந்தில் பங்கேற்பதை தவிர்ப்பது என முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் தடை கோரும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

இது ஆளுநர் கொள்கை அளவு தமிழக அரசுடனும் தமிழக மக்களுடனும் முரண்படுகிறார் என்பதை காட்டுகிறது எனவும் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon