--- --:--:-- --

492 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு இலவச மின் இணைப்பு கொடுத்த அரசு..!

5

திருவாரூரில் மின் வசதி இன்றி செல்போன் டார்ச் அடித்து படித்து 492 மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாலா – சுதா தம்பதி. இவர்களது மகள் துர்கா தேவி.

 

அரசு பள்ளியில் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினார். அப்பொழுது தனது வீட்டில் மின் வசதி இல்லை என்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து தான் 492 மதிப்பெண் எடுத்தேன் எனவும் கூறியிருந்தார்.

 

இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி, கலைவாணன் உட்பட மின்வாரிய அதிகாரிகள் மாணவியின் வீட்டை ஆய்வு செய்து இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.

 

தற்பொழுது மின் இணைப்பு கொடுத்துள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பாக படித்து மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெறுவேன் என துர்கா தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon