மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவனை கொலை செய்த கணவன்..!
கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனா குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். 37 வயதானவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் முதல் மனைவி இந்துமதியின் தங்கையான சூர்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதே வேளையில் வெளிநாட்டில் ரமேஷ் வேலை பார்த்ததால் சூர்யா வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இதை பலமுறை ரமேஷ் கண்டித்துள்ளார். இருப்பினும் சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரமேஷ் சொந்த ஊருக்கு வந்து சூர்யாவுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் துரோகியே ஒழிந்து போ என்றபடி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து, கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதன் காரணமாக இரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தகவலறிந்து கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.





