நண்பனை குத்தி கொலை செய்த நண்பன்..!
திருவொற்றியூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷோபன் என்பவருக்கும் பிரசாத் என்பவரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதில் பீர்பாட்டிலால் பிரசாத்தை தலையில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனை அறிந்த பிரசாத் நண்பர்கள் ஆன ஜோதிவாசு, சுரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் கோபத்துடன் சோபனை தேடி வந்துள்ளனர். அப்பொழுது திருவொற்றியூர் வட வீதி நின்று கொண்டிருந்த சோபனை மூன்று பேரும் சேர்ந்து தாக்கியத்துடன் ஜோதி வாசு கத்தியால் சோபனை குத்தி விட்டு தப்பி ஓடினார்.
இதில் படுகாயம் அடைந்தவர் ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார். தகவல் அறிந்து வந்த திருவெற்றியூர் போலீசார் பிணத்தை விட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் ஜோதி வாசு உட்ட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





