--- --:--:-- --

தனது பிறந்தநாள் பரிசாக வந்த தங்க செயினை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..!

9

தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இஷானிகா என்ற சிறுமி தனது பிறந்தநாள் பரிசாக வந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இஷானிகா என்ற சிறுமி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரின் மூத்த மகள் ஆவார்.

 

இந்நிலையில் இஷானிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறுமியின் தாத்தா 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை அணிவித்துள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வாழ்த்துக்கள் கூற வரும் பொழுது 4 ஆயிரத்து 300 ரூபாய் அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

 

இதனையடுத்து சிறுமி தனது பிறந்த நாள் பரிசாக வந்த 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினையும் ரொக்கப் பணத்தையும் திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Right Menu Icon