அலட்சியமாக இருந்த காரணத்தினால் எனக்கு கொரொனா வந்துவிட்டது..!
அலட்சியமாக இருந்த காரணத்தினால் தற்போது அவதிப்படுவதாக நடிகர் சென்ராயன் வீடியோ வெளியிட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். மூடர்கூடம், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சென்ராயன். கடைசியாக கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சென்ராயன் தனக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். லட்சியமாக இருந்த காரணத்தினால் தான் தனக்கு கொரொனா வந்ததாகவும் அவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.






