பெயிண்டரை விரட்டி விரட்டி வெட்டி கொன்ற கும்பல்..!
நெல்லை மேலப்பாளையம் அருகே டாஸ்மாக் மதுபான கடை முன்பு பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழச்சனூர் நைனார் குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கருங்குளம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு வீடு திரும்பியிருந்த நிலையில் மர்மநபர்கள் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தடயவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு மேற்கொண்ட போலீசார் கொலைக்கு முன்விரோதம் காரணமா என விசாரித்து வருகின்றனர்.





