கைக்குழந்தையுடன் வந்த நரிக்குறவர்கள்.. இரவு வரை டிக்கெட் கொடுக்காமல் அலைக்கழிப்பு..!
கோவையில் படம் பார்க்க டிக்கெட் வழங்காமல் திரையரங்கு நிர்வாகம் அலைக்கழித்ததால் நரிக்குறவர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த அவலம் அரங்கேறி உள்ளது.
கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நாற்பது பேர் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளனர். காலை 11 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் இல்லை. எனவே இரவு காட்சிக்கு வரும் வருமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதியம் மூன்று மணி வரை காத்திருந்த நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு 7 மணி காட்சிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.






