ரூ.9 லட்சம் அரசு பேருந்து டிக்கெட்டை திருடிய நடத்துனரால் பரபரப்பு..!
கள்ளக்குறிச்சியில் 9 லட்சம் மதிப்பிலான அரசு பேருந்து டிக்கெட்டுகளை திருடிய நடத்துனர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழகத்தின் கள்ளக்குறிச்சி – சென்னை இடையே இயக்கப்படும் பேருந்தில் தமிழரசன் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் 9 லட்சத்து 2,000 ரூபாய் மதிப்புள்ள அரசு பேருந்து பயண சீட்டுகள் திருடப்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய தமிழரசன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கிளை மேலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழரசன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இது குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






