தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வரும் 22ஆம் தேதி அறிமுகம்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வரும் 22ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படமும், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை முடித்துவிட்டு தீவிர அரசியலில் அவர் பங்கெடுப்பார் எனவும் கூறப்பட்டது.இந்நிலையில், வரும் 22ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




