கடலுக்குள் பிரம்மாண்ட வெடிகுண்டை வீசி சோதனை…!
அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர் கப்பல் கடலுக்குள் மிகப் பெரிய குண்டை வீசி பயிற்சியில் ஈடுபட்டது. புளோரிடாவில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் யுஎஸ்எஸ்சர் என்ற விமானம் தாங்கி கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிரம்மாண்ட வெடிகுண்டை கடலுக்குள் வீசி சோதனை நடத்தியது.
அந்த குண்டு வெடித்ததும் கடலுக்குள் 3.9 ரிக்டர் அளவுக்கு அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. சோதனை வெற்றி பெற்றதாகவும் கடலில் ஏற்பட்ட யுஎஸ்எஸ்ஜெரால்டு ஆர் கப்பல் தாங்கி கொண்டதாகவும் கடற்படை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







