சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று ட்விட்டரில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளான இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.





