குழந்தை பிறந்த மறுநாளே உயிரிழந்த பெண் தலைமை காவலர்..!
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை பிறந்த நாளிலே அவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் முன் களப்பணியாளர்கள், காவல்துறையினரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.
மக்களை காக்கும் போரில் பல காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்னுயிர் நீத்தனர். சென்னையில் மட்டும் காவல்துறையை சேர்ந்தவர்களில் முதல் அலையில் 10 பேரும், இரண்டாவது அலையில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அண்மையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையுடன் கொஞ்சி மகிழும் கனவுகளுடன் இருந்த வசந்தாவை கொரொனா கொன்றுவிட்டது. இறந்த மறுதினமே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வசந்தாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய உதவிகள் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.







