--- --:--:-- --

கிணற்றில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல் மீட்பு..!

6

14 வயது சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இனி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கரூர் மாவட்டம் சவாரிமேடு கிராமத்தை சேர்ந்த விதவை பெண் கலைவாணியின் மகளான சிறுமி தேவிகாவும், வார்டு உறுப்பினர் குணசேகரனின் மகன் பதினெட்டு வயதான கஜேந்திரனும், காதலித்து வந்ததாக தெரிகிறது.

 

24ஆம் தேதி தேவிகா, வருண் அக்கா இருவரும் கஜேந்திரனிடம் கல்யாணம் பேச சென்றபொழுது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேவிகாவை தாக்கியதாகவும் அவர்களிடமிருந்து தேவிகா தப்பித்து தனது உறவினர்களிடம் தகவலை கூறியதாகவும் தெரிகிறது.

 

தேவிகாவையும் காணவில்லை. அவரது உறவினர்கள் தேடிய நிலையில் அடுத்த நாள் விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமி தேவிகாவின் தாயார் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த நிலையில் காதலன் கஜேந்திரன் அவர்கள் தந்தை குணசேகரன், மாமா முத்தையன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon