--- --:--:-- --

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற போது தந்தை பலி..!

10

சென்னை திருவான்மியூரில் கடற்கரையோரம் கடல் அலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அலையால் இழுத்து செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி தனது 11 வயது மகள் உடன் அலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடல் அலையால் குழந்தை இழுத்துச் செல்லப்பட்டதை கண்டு அவரை காப்பாற்ற சென்றபோது அவரும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

இதைக்கண்ட மீனவர்கள் விரைந்து வந்து குழந்தையை காப்பாற்றிய நிலையில் பாலாஜி உயிரிழந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கினார்.

Leave a Reply

Right Menu Icon