--- --:--:-- --

நான்கு வயது மகனின் எலும்புக்கூடுகளை எடுத்து சென்ற தந்தை..!

11

தீ விபத்தில் உயிரிழந்த மகனின் எலும்புக்கூடுகளை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அதனை தந்தை பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள முருகா கிராமத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சந்திரராஜ் என்ற நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.

 

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு உடலை எடுத்து செல்ல அவரது தந்தை முற்பட்டும் இறுதிவரை ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் தந்தையே மகனின் எலும்புக்கூடும் மற்றும் சாம்பலை கூடையில் வைத்து அதனை ஆரஞ்சு நிற துணையால் சுற்றி எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon