--- --:--:-- --

சடலத்தை 3 நாட்களாக புதைக்க முடியாமல் தவித்த குடும்பம்..!

2

ர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மூன்று நாட்களுக்கு முன் இறந்த 70 வயது பெண்மணியின் சடலம் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

ஒரு பிரிவை சேர்ந்த முனியம்மாள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில் மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்று புதைப்பதற்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட வழிபாட்டையை இரண்டு தரப்பினர் வழிவிடாமல் வேலி அமைத்துள்ளனர்.

 

இதனால் சுடுகாட்டிற்கு எடுத்து செல்லாமல் மூன்று நாட்களாக பெண்மணியின் சடலத்தை வீட்டில் முன்பு வைத்து வந்துள்ளனர். இந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம மக்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

20 நாட்களுக்கு மயானத்திற்கு செல்வதற்கான நிரந்தர வழிபாடு செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதால் மாற்றுவழி பாதையில் சடலம் கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Right Menu Icon