--- --:--:-- --

ராஜினாமா செய்யாத ஊழியர்..இருட்டறையில் வைத்து கொடூரம்..!

10

ராஜினாமா செய்யாத ஊழியரை ஒரு நிறுவனம் இருட்டு அறையில் அடைத்து துன்புறுத்திய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவை சேர்ந்த நிறுவனம் தனது ஊழியரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியுள்ளது.

 

ஆனால் ஊழியர் ஒப்புக்கொள்ளாததால் நான்கு நாட்களாக இருட்டு அறையில் அடைத்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுதியுள்ளது.

 

இதனிடையே கணவரை காணவில்லை என ஊழியரின் மனைவி போலீசில் புகார் அளித்ததையடுத்து இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் 44 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon