--- --:--:-- --

சிறுமியின் சடலத்தை கடித்து இழுத்த நாய்..! மருத்துவமனையின் அலட்சியம்..!

1

த்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலத்தை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை ஒரு நாய் தொடர்ச்சியாக மெல்ல கடித்து இழுக்கிறது.

 

சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சிறுமியின் உடலை கடித்ததற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனிடையே தெருநாய்கள் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மருத்துவமனை சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தின் அருகே யாரும் இல்லாத போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon