--- --:--:-- --

இன்று கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார் பிரதமர்..!

2

The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கும் மையங்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பார்வையிட உள்ளார். சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து ஆய்வு குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்து வரும் நிலையில் அங்கு பிரதமர் நேரில் சென்று ஆய்வு விபரங்கள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கேட்டறிகிறார்.

 

இதைத்தொடர்ந்து புனே செல்லும் பிரதமர் அங்கு சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வரும் கொரொனா தடுப்பூசியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டு அறிகிறார். இதன் பின் அங்கிருந்து ஹைதராபாத் செல்லும் பிரதமர் அங்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் தடுப்பூசி மீதான விவரங்களை கேட்டறிகிறார்.

 

கொரொனா தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்திற்குள் தயாராகி விடும் என கூறப்படும் நிலையில் அவற்றை நாடெங்கும் கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon