மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற மணமக்கள்..!
கைபிடித்த மணமகனோடு புகுந்த வீட்டிற்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற மணமகளை ஊரே வியந்து பார்த்தது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கௌதமன் – சௌந்தர்யா என்ற மணமக்களுக்கு திருமணம் முடிந்து வெள்ளாள பாளையத்தில் உள்ள மணமகன் வீட்டிற்கு மாட்டு வண்டியில் சென்றனர்.
பெண் வீட்டு சீதனமாக கார் அளித்திருந்த நிலையில் மணமக்களோ பழமையை நினைவு கூறும் வகையில் 10 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணித்தனர்.
தங்களது இரு குடும்பங்களும் விவசாய பின்னணியைக் கொண்டது என்பதாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாட்டுவண்டிப் பயணம் மேற்கொண்டதாக மணமக்கள் தெரிவித்தனர்.






