--- --:--:-- --

உயிருடன் இருக்கும் குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்..!

5

டெல்லி மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை இறுதி சடங்குக்கு சிறிது நேரத்திற்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பெட்டியில் வைத்து பெற்றோரிடம் மருத்துவர்கள் அளித்தனர். இதையடுத்து குழந்தைக்கு இறுதி சடங்கு மேற்கொள்ள பெட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து பரிசோதித்த பொழுது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் கொண்டு சென்ற பொழுது குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக கடுமையான அலட்சியம் என குற்றம் சாட்டியுள்ளது.

 

Right Menu Icon