பெற்றோரின் காலில் விழுந்த தலைமை ஆசிரியை..!
புதுக்கோட்டை புலிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த பொழுது உயிரிழந்த மாணவிகளின் உடற்கூராய்வு அறிக்கையை பெற்று தந்த பிறகு பள்ளியை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது பள்ளி ஆசிரியர் பெற்றோரின் காலில் விழுந்தார். புதன்கிழமைக்குள் இறப்பு சான்றிதழ் தருவதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்ததை தொடர்ந்து சமாதானம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





