--- --:--:-- --

பரபரப்பை கிளப்பிய வீடியோ மருத்துவரின் விளக்கம்..!

2

நோயாளியை அரசு மருத்துவர் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சம்மந்தப்பட்ட மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே, அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் அவர் அனுமதிக்கப்பட்ட பொழுது மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

 

செவிலியர் ஊசி செலுத்தி காத்திருக்கும் படி கூறியுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. நோயாளியின் குடும்பத்தினரை மருத்துவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர் கார்த்திகேயன் இரவில் ஸ்கேன் எடுக்கும் வசதி இல்லாததால் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக நோயாளியிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

 

அதை ஏற்க மருத்துவர்கள் மருத்துவமனையை இழிவாக பேசித் தகராறு செய்ததாக ஆட்களை அழைத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon