தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்.. சுகாதார நிலையம் முன்பு உறவினர்கள் தர்ணா..!
புதுச்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் லாரி ஓட்டுநர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் ராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் ஊசி போட்டு மாத்திரைகள் அளித்த மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அருள்ராஜ் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அருள்ராஜ் உடலை வைத்துக்கொண்டு சுகாதார நிலையத்திற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.





