--- --:--:-- --

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை..!

5

ர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்புகள் 1,100ஐ தாண்டி விட்டது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது.

 

இந்த சூழலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

அதாவது, உடல்நிலை சரியில்லை எனில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல், மூக்கில் ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் பத்திரமாக வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமின்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாய், மூக்கு ஆகியவற்றை மூடியிருக்கும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த விஷயத்தில் வீட்டிலேயே மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

 

முகக்கவசம் அணிந்திருக்கும் போது அதன் முன்பகுதியை கைகளால் தொடக்கூடாது. பக்கவாட்டில் இருக்கும் எலாஸ்டிக் பேண்ட்களை மட்டுமே தொடலாம். தங்களது முகக்கவசங்களை நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளக் கூடாது.

 

கைகளை அடிக்கடி கழுவவும் அறிவுறுத்த வேண்டும். தற்போதைய சூழலில் யாரும் பயப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை உடன் இருப்பது நல்லது. தேவையின்றி நோய் பாதிப்புகள் அதிகரித்தால் அதன்பிறகு பிரச்சினைகள் வரும்.

 

எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடகா தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் சங்கத்தின் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதலே அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

Right Menu Icon