அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது..!
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தியில் பார் கவுன்சில் அறிவுறுத்தலின் படி சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக்கல்லூரிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களுக்கு இன்டர்நெட் மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கும் விவகாரத்துக்கு அகில இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ஆபிரகாம் விளக்கம் அளித்துள்ளார்.







