சானிடைசர் மற்றும் சோப்பை அதிகளவில் பயன்படுத்துவதில் நேரிடும் ஆபத்து..!
கொரொனா தடுப்புக்கு சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிக அளவில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரொனா பரவலை தடுக்க சானிடைசர், சோப்புகளை பயன்படுத்துவதே தற்போது மக்களிடையே பழக்கமாக மாறி உள்ளது. ஆனால் சானிசைடர் மற்றும் சோப்புக்களை அதிகம் பயன்படுத்துவதால் உடலின் நுண்ணுயிர் மண்டலம் அழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுண்ணுயிர் தொடர்பான இணைய கருத்தரங்கில் பங்கேற்று பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையில் நுண்ணுயிர் பிரிவு தலைவர் மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகள் நோய் எதிர்ப்பாற்றல் ஆக மாறி பல நோய்கள் தாக்காமல் அவை தடுப்பதாக கூறுகிறார்.
சானிடைசர் மற்றும் சோப் அதிகம் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு நோய் எளிதில் தாக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கால்நடை மற்றும் விலங்குகளிடமிருந்து நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் புகுந்து நோய்கள் ஏற்படுவதை உடலில் உள்ள நிணநீர் மண்டலம் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.







