காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூர கணவன்..!
கன்னியாகுமரியில் வரதட்சணை தர மறுத்ததால் காதல் மனைவியை தரதரவென காரில் இழுத்து சென்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சேர்ந்த அபிஷா என்ற இளம் பெண் பெல்லின் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பொழுது 81 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிசாவின் தந்தை தனது மகளுக்கு சீதனமாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அபிஷாவிடம் வரதட்சனை கேட்டு கணவர் பெர்லின் கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அவர் தந்தை வீட்டில் இருந்தபடி வேலைக்கு சென்று வந்த அபிஷாவை நண்பர்களுடன் காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்து தாக்கியதுடன் பின்னர் காலில் அபிஷாவை வலுக்கட்டாயமாக தரப்பட கொடூரமாக இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவியில் பதிவானது. இது தொடர்பாக ஆபிசாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





