--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழப்பவர்களை உரிய முறையில் அடக்கம் செய்ய கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபோ..!

12

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களை தக்க மரியாதையுடனும், மதிப்புடனும் கையாண்டு அடக்கம் செய்ய புதிய ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாவட்ட எலக்ரிக் மோபிலிடி என்ற நிறுவனம் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது. கொரொனாவால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் தொட்டு அருகில் சென்று பார்க்க முடியாத நிலை உள்ளது.

 

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட இயலாதபடி ஒரு கையறு நிலைக்கு இந்த மனித சமூகம் சென்றுள்ளது. இந்த வேதனையை போக்கும் வகையில் ஜாதி என்ற ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாத கிராமங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இனி இந்த ரோபோ மூலம் எளிதில் வெளியே கொண்டுவந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.

 

அத்துடன் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை இழந்தவர்களை ஆதரவற்ற சடலங்களை போன்று எறியாமல் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்ய முடியும். பிறப்புக்கும் எல்லா சடங்குகளுக்கும் அதிக மதிப்பு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா போன்ற நாடுகளின் தற்போதைய தேவையாக இந்த ரோபோ இருக்கும் என்று அந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon